மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கிட்டத்தட்ட 20 வருடத்திற்குப் பிறகு மீண்டும் சட்டசபைத் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார். வைகோ தேர்தல்களில் போட்டியிட்டது மிக மிகக் குறைவுதான். இதுவரை அவர் மொத்தமே 5 முறைதான் தேர்தலில் போட்டியிட்டுள்ளார். அதிமுக முறை அவர் ராஜ்யசபா உறுப்பினராக இருந்துள்ளார். வைகோ முதல முறையாக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டது 1996ல்தான். 1993ம் ஆண்டுதான் அவர் மதிமுகவைத் தொடங்கியிருந்தார். அடுத்த 3 வருடத்தில் அவர் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டார்.
விளாத்திகுளத்தில் முதல் தோல்வி 1996ல் நடந்த தேர்தலில் அவர் விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் வெறும் 634 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியைத் தழுவினார்.
1996ல் சிவகாசியில் தோல்வி அதன் பின்னர் அவர் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடவில்லை. மாறாக லோக்சபா தேர்தலில் போட்டியிட ஆரம்பித்தார். 1996ல் நடந்த லோக்சபா தேர்தலில் சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு 3வது இடத்தைப் பிடித்தார்.
2 முறை வெற்றி இதையடுத்து 1998 மற்றும் 1999ல் நடந்த லோக்சபா தேர்தலில் அதே சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் வைகோ.
2014ல் மீண்டும் தோல்வி 2014ம் ஆண்டு அவர் மீண்டும் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டார். இந்த முறை அவர் விருதுநகரில் போட்டியிட்டார். இதில் அவருக்குத் தோல்வியே கிடைத்தது.
மீண்டும் தேர்தலில் இந்த நிலையில் தற்போது மீண்டும் சட்டசபைத் தேர்தலுக்கு அவர் திரும்பியுள்ளார். கோவில்பட்டியில் அவர் களம் காண்கிறார். இதுவரை சட்டசபைக்குள் நுழைந்திராத வைகோவுக்கு கோவில்பட்டி வாசல் திறக்குமா என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும்.


No comments:
Post a Comment