பெண் வழக்குரைஞர்களுக்கு எதிராகப் பரப்பப்பட்ட அவதூறான பதிவுகளை தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, சமூக ஊட கங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுதொடர்பாக, சுதா ராமலிங்கம், அன்னா மேத்யூ உள்ளிட்ட 6 பெண் வழக்குரைஞர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக் கல் செய்த மனு விவரம் வருமாறு:
பெண் வழக்குரைஞர் களுக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் வழக் குரைஞர் பீட்டர் ரமேஷ் குமார் சமூக ஊடகங்களில் ஒலிப்பதிவை வெளியிட் டிருந்தார். இதை வழக்கு ரைஞர் மணிகண்டன் வத னும் பகிர்ந்துள்ளார். இரு வரும் அவதூறான பதிவு களை வெளியிடுவதை தடுக்க உத்தரவிட வேண் டும். மேலும், பெண்கள், பெண் வழக்குரைஞர்க ளுக்கு எதிராக தரக்குறை வான கருத்துகள் பதிவிடு வதைக் கண்காணிக்கவும், அதுபோன்ற கருத்து களைத் தடை செய்யவும் மத்திய தகவல் தொழில் நுட்பத் துறை, “பேஸ்புக்‘, “யூ டியூப்’, “கூகுள்’ இந்தியா நிறுவனம் ஆகியவற்றுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தனர்.
இந்த மனு நீதிபதிகள் வெ.ராமசுப்பிரமணியன், கே.ரவிச்சந்திரபாபு ஆகி யோர் முன்பு விசார ணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆர்.வைகை ஆஜ ராகி வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதி கள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:
நீதித்துறை, பெண் வழக்குரைஞர்களுக்கு எதி ராகவும் கருத்துகளை பதிவு செய்ய தொடர்பு டைய 2 வழக்குரைஞர்க ளுக்கும் தடை விதிக்கப் படுகிறது.
இதுதொடர்பாக “பேஸ்புக்‘, “யூடியூப்’ “கூகுள் இந்தியா’ ஆகிய நிறுவனங் கள் தொடர்புடைய 2 வழக்குரைஞர்களின் செல் லிடப்பேசி எண்களிலி ருந்து பெண்களுக்கு எதிரா கப் பரப்பப்பட்ட அவ தூறான பதிவுகளை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தர விட்டனர். பின்னர் வழக்கு விசாரணையை பிப்ரவரி 26- ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
No comments:
Post a Comment