மின்ணணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி நாளை முதல் தொடங்கும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். மின்ணணு இயந்திரத்தில் ஏற்கனவே பதிவான வாக்குகளை அழிக்கும் பணி நடைபெறுகிறது. இதுவரை வாக்காளர் பட்டியலில் இருந்து 60 ஆயிரம் பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் போலியாக சேர்க்கப்பட்ட பெயர் மற்றும் இறந்தவர் பெயர்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என லக்கானி தெரிவித்துள்ளார். வரும் 10-ம் தேதி தலைமைத் தேர்தல் ஆணையர் தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. 11ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி.க்களுடன் நசீம் ஜைதி ஆலோசனை நடத்த உள்ளார்.
நேற்று நடைபெற்ற சிறப்பு முகாமில் சுமார் 7 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன என்று லக்கானி தகவல் தெரிவித்துள்ளார். சுமார் 60 ஆயிரம் மனுக்கள் பெயர் நீக்கம் செய்ய விண்ணப்பம் பெறப்பட்டுள்ளன. 85 சதவீதம் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள 15 சதவீதம் பேருக்கு விரைவில் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் எனுவும் அவர் தெரிவித்துள்ளார். மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 18-29 வயதுடைய பலர் பட்டியலில் இடம் பெறவில்லை, மேலும் வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ளவர்கள் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.
சென்னையில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேல் இறந்தவர்கள் பெயர் பட்டியலில் உள்ளது. இறந்தவர்களின் பெயரை நீக்க அனைத்து அரசியல் கட்சிகளும் உதவ வேண்டும். மேலும் அனைத்து கட்சி வாக்குச்சாவடியில் முகவர்களும் இறந்தோர் பெயர் பட்டியலை தர அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இரட்டைப்பதிவு, இடமாற்றம், ஓரே புகைப்பட பதிவுகளும் நீக்கும் பணி நடைபெறுகிறது எனவும் ராஜேஷ் லக்கானி தகவல் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment