Latest News

கர்நாடகா: ஹூப்ளி ரயில் நிலையத்தில் கட்டிடம் இடிந்து விபத்து; 5 பேர் பலி


கர்நாடக மாநிலம் ஹூப்ளி ரயில் நிலையத்தில் கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். கர்நாடக மாநிலம் ஹூப்ளி ரயில் நிலையத்தில் உள்ள காவல் நிலையம் மற்றும் பார்சல் அலுவலக கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் மத்திய ரிசர்வ் படை போலீசார் 2 பேரும், ரயில்வே ஊழியர்கள் இரண்டு பேர் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருந்த இருவர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ள 2 பெண் காவலர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மீட்பு பணியில் இரண்டு தீயணைப்பு வண்டிகள் மற்றும் 3 ஜேசிபி இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.