கோலாலம்பூர் (18-01-16): மலேசிய அரசின் உயரிய விருதான சிறந்த குடிமகனுக்கான "டத்தோ" பட்டத்தை தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் பெற்றுள்ளார்.
மலேசிய அரசால் வழங்கப்படும் உயரிய விருதான "டத்தோ" விருது முக்கியமான விருதுகளில் ஒன்றாகும். இந்த உயரிய விருதை மலேசியாவின் சுல்தான்கள் மற்றும் ஆளுநர்களும் வழங்குகின்றனர்.
அந்நாட்டு பொதுமக்களின் சேவைகளைப் பாராட்டும் வகையில் வழங்கப்படும் இந்த விருதை வெளிநாட்டவர்களும் தங்களின் அரிய சேவைகளுக்காக பெற்றுள்ளனர். தற்போது அந்த விருதுகள் பெறும் 12 பேரில் இராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவரும் இடம் பெற்றுள்ளார்.
அவர் இராமநாதபுரத்தை சேர்ந்த முஹம்மது யூசுப் என்பவராவார். இவர் சிறந்த குடிமகன், மனிதநேயம் மற்றும் வர்த்தகம் ஆகிய 3 பிரிவுகளில் டத்தோ விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


No comments:
Post a Comment