பாட்னா (18 ஜன 16): பாரதீய ஜனதாவுக்கு எதிராக மதசார்பற்ற கட்சிகள் ஓரணியில் திரளவேண்டுமென்று லாலு பிரசாத் கூறியுள்ளார்.
ஜனதா தளம் கட்சியின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட லாலு பிரசாத் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,, எல்லைக்கு வெளீயிலிருந்து யாராவது நம்மிடம் வாலாட்டினால் தக்க பதிலடி கொடுப்போம் .
இன்றோ பாகிஸ்தான் தீவிரவாதிகள் நமது எல்லைக்குள் நுழைந்து பதான்கோட்டில் தாக்குதல் நடத்தி நமது வீரமிக்க ராணுவ வீரர்களை கொல்கிறார்கள். பா.ஜனதாவின் ஆட்சியில் நாடு பாதுகாப்பாக இல்லை. எனவே, பா.ஜனதாவுக்கு எதிராக மதசார்பற்ற கட்சிகள் ஓரணியில் திரளவேண்டுமென்றும் கூறியுள்ளார்.
மேலும், நானும் பீகார் முதல் அமைச்சர் நிதிஷ்குமாரும் நாடு முழுவதுமுள்ள மதசார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து பா.ஜனதாவை டெல்லியிலிருந்து வெளியேற்றுவோம். எங்களுக்கு இடையை விரிசலை ஏற்படுத்த பா.ஜனதா முயற்சிக்கிறது. ஆனால், எங்களுக்கு எவ்வித கருத்து வேறுபாடும் கிடையாது.
சாதி வாரியான கணக்கெடுப்பை மத்திய அரசு வெளிப்படையாக அறிவிக்கவேண்டும். இல்லாவிட்டால் மத்திய அரசுக்கு எதிராக பாட்னாவிலும் நாட்டின் இதர பகுதிகளிலும் போராட்டம் நடத்துவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.


No comments:
Post a Comment