ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். மீன்களை பறித்து கொண்டு வலைகளை அறுத்து எரிந்து இலங்கை கடற்படையினர் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று காலை 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 1500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள் இந்திய எல்லையான கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தி விரட்டியடித்தனர்.
அதுமட்டுமில்லாமல் 20-க்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த மீன்பிடி வலைகளை அறுத்து கடலில் எரிந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதனால் ராமேஸ்வரம் மீனவர்களின் படகு ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க செல்கின்ற போது இலங்கை கடற்படை தொடர்ந்து மீன்பிடிக்க விடுவதே கிடையாது என மீனவர் சங்க தலைவர் தெரிவித்தார். எப்போதும் எங்களை விரட்டியடிக்கின்றனர்; படகுகளை சேதபடுத்துகின்றனர்; வலைகளை அறுத்து எரிகின்றனர் என்றும் வேதனையுடன் தெரிவித்தனர்.
Sent from my Samsung device

No comments:
Post a Comment