மக்கள் குறைகளை உடனுக்குடன் தெரிவிப்பதற்காக கொண்டுவரப்பட்ட அம்மா அழைப்பு மையம் தொடங்கிய 2-வது நாளிலேயே தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. மக்களின் குறைகளை உடனுக்குடன் களையும் வகையில் தமிழக அரசின் சார்பில் அம்மா அழைப்பு மையம் நேற்று தொடங்கப்பட்டது. இந்த அழைப்பு மையத்தை 1100 என்ற எண்ணில் 7 நாட்களும் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்றும் மக்களின் குறைகள் உடனுக்குடன் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றிய விவரம் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் 1100 என்ற எண்ணை தொடர்புகொள்ள முயன்ற போது அந்த தொடர்பு எல்லைக்கு வெளியே வெளியே இருப்பதாக ஆங்கிலம் மற்றும் இந்தியில் பதிவு செய்யப்பட்ட குரலே ஒலித்தது. அனைத்து இணைப்புகளும் பயன்பாட்டில் இருப்பதாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவு செய்யப்பட்ட குரலை மட்டுமே கேட்க முடிந்தது. மக்களின் குறைகளை களைவதாக கொண்டுவரப்பட்ட அழைப்பு மையத்தை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.


No comments:
Post a Comment