சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெய்து வரும் கன மழையால் சென்னை மாநகரத்தை பிற தென் மாவட்டங்க
இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களால் போக்குவரத்து முழுவதுமாக ஸ்தம்பித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் நகர முடியாத அளவிற்கு சிக்கித் தவித்து வருகின்றனர். சென்னை- தாம்பரம் இடையே இச்சாலையில் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல இடங்களில் இடுப்பு அளவுக்கு தண்ணீர் செல்கிறது. இதனால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்கு இயக்கப்படும் நீண்ட தூரப் பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், சென்னை நோக்கி வரும் பேருந்துகள் அனைத்தும் செங்கல்பட்டிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தொடர்ந்து பேருந்துகளை இயக்க முடியாமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீண்டும் மீண்டும் மழை மிரட்டி வருவதால் சென்னை வாசிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment