தமிழகத்தில் கனமழையால் டிசம்பர் மாதம் நடைபெற வேண்டிய அரையாண்டு தேர்வுகள் ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னையில் தற்போதும் பேய்மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் கடந்த 3 வாரங்களாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், தமிழகத்தில் டிசம்பர் 7-ந் தேதி முதல் தொடங்க இருந்த அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் இவை அனைத்தும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என்றும் முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment