அதிமுகவில் இருந்து காவல்துறை முன்னாள் இயக்குநர் ஆர்.நட்ராஜ், கட்சியில் இருந்து நீக்கம் என்று ஜெயலலிதா நேற்று அறிவித்தார். அந்த நடவடிக்கை ரத்து என்று இன்று ஜெயலலிதா அறிவித்துள்ளார். ஆர்.நடராஜ் மீதான நடவடிக்கையில் நடந்த குளறுபடிக்கு, தந்தி டிவியில் நடந்த சிறு குளறுபடிதான் காரணம் என்று கூறப்படுகிறது.
முன்னாள் சென்னை மாநகர கமிஷனர் ஆர்.நடராஜ் ஐபிஎஸ், ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தவர். அவர் நேற்று( 14.12.2015) அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
தந்தி டிவியில் சென்னை மழை வெள்ளம் குறித்த விவாதம் நடைபெற்றபோது, தொலைபேசி மூலமாக பத்திரிகையாளர் ‘இந்து’ஆர்.நடராஜன், தமிழக அரசை விமர்சித்து பேசினார். அப்போது டிவியில், மூத்த பத்திரிகையாளர் ’இந்து’ ஆர்.நடராஜன் படத்தை காட்டுவதற்கு பதிலாக, தவறு தலாக காவல்துறை முன்னாள் இயக்குநர் ஆர்.நட்ராஜ் புகைப்படத்தை காட்டிவிட்டனர்.
தந்தி டிவிக்கு பத்திரிகையாளர் ஆர்.நடராஜ் அளித்த பேட்டியில், ‘’இங்கே அதிகாரம் பரவலாக் கப்படவில்லை. எல்லா அதிகாரமும் முதல்வர் கையில் உள்ளது. அவர் கண்ணசைவுக்கு அதிகாரிகள் காத்திருந்ததே இந்த பெரும் சேதத்துக்கு (வெள்ளம் ) காரணமாக அமைந்துவிட்டது. , கீழ்மட்ட அதிகாரிகளூக்கு உத்தரவிடத்தான் தலைமைச்செயலர் இருக்கிறார். ஆனால் புதிதாக அவருக்கு ஆலோசனை வழங்க ஒருவர் வந்து, அவர் எல்லா தேவைக்கும் முதல்வர் உத்தரவிற்கு காத்திருந்தது இந்த பெரும் சேதத்துக்கு காரணம்.
முன்பெல்லாம் அணையை பொதுப்பணித்துறை அதிகாரிகள் திறந்துவிடுவார்கள். ஆனால், மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித்தலைவி அம்மாவின் ஆணைக்கினங்க’’ என்று யார் யாரோ திறக்குறாங்க. அவர்களுக்காக காத்திருந்தது பெரும்சேதத்திற்கு காரணம். மொத்தத்தில் அரசு நிர்வாகம் சரியாக செயல்படாததே இத்தனை பெரும் சேதத்திற்கு காரணம்’’ என்று தெரிவித்துள்ளார்.
இதைக்கேட்டு ஆத்திரப்பட்டுத்தான், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி பேசியதாக நினைத்துக்கொண்டு ஆர்.நடராஜை கட்சியில் இருந்து உடனே நீக்கியுள்ளார் ஜெயலலிதா என்று கூறப்பட்டது. இவ்வாறு கூறப்பட்டு வந்தது போலவே, இன்று ஆர்.நடராஜ் ஐபிஎஸ் மீதான நடவடிக்கை ரத்து என்று அறிவித்துள்ளார் ஜெயலலிதா.


No comments:
Post a Comment