பியூனோஸ் அர்ஸ்: அர்ஜென்டினாவில் பஸ் கவிழந்து விபத்துக்குள்ளானதில் 41 போலீசார் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயமடைந்தனர். அர்ஜென்டினாவின் வடக்கு பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் சென்ற பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதி தலைகுப்புற கவிழ்ந்து 65 அடி பள்ளத்தில் விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் இருந்த 41 பேர் பலியாகினர்.
அர்ஜென்டினா தலைநகர் பியூனோஸ் அர்ஸ் வடக்குப்பகுதியில் சால்டா என்ற இடமருகே நடந்த இந்த விபத்திற்கு காரணம் என்றும் பேருந்தின் டயர் வெடித்ததில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் விபத்திற்கான சரியான காரணம் எதுவும் இதுவரை தெரியவில்லை. பேருந்தில் 60 பேர் இருந்ததாகவும், காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.


No comments:
Post a Comment