மாஸ்கோ: ரஷ்யா சென்ற பிரதமர் நரேந்திர மோடி தேசிய கீதம் இசைக்கப்பட்ட போதும் நடந்து சென்றதால் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக நேற்று ரஷ்யா புறப்பட்டுச்சென்றார். ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ சென்றடைந்த அவருக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாஸ்கோ விமான நிலையத்தில் மோடி இறங்கியதும் ரஷ்யா வீரர்கள் நமது நாட்டின் தேசிய கீதத்தை இசைத்து வரவேற்பு அளித்தனர். ஆனால் அதை கவனிக்காத பிரதமர் நடந்து சென்று கொண்டிருந்தார். இதனால் ஓடிச்சென்று மோடியை தடுத்து நிறுத்தி தேசிய கீதம் பாடப்படுவதை சுட்டிக்காட்டினர். இதன் பின்னரே தேசிய கீதம் முடியும் வரை நின்று மரியாதை செலுத்தினார். அண்மையில் ஆசியான் மாநாட்டில் ஜப்பான் பிரதமரை மோடி சந்தித்து பேசிய போது, நாட்டின் தேசிய கொடி தலைகீழாக இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment