தினமும் பல்லாயிரக்கணக்காண பயணிகளும் பல நூற்றுக்கணக்காண பள்ளிக்குழந்தைகளும் பயணிக்கும் அதிரை to பட்டுக்கோட்டை ரோடு குண்டும் குழியுமாக... கிட்டத்தட்ட காணாமல் போயே பல நாட்களாகியும் மீட்டுத்தருவார் யாருமின்றி பரிதவித்துக் கொண்டுள்ளது.
சமீபத்திய மழையால் ரோடு சேதமாகிவிட்டதாக சொல்லப்பட்டாலும் மழைக்கு முன்பிருந்தே ரோடு மிக மோசமான நிலையில் தான் இருந்தது என்றும் இப்போது அது படுமோசமாக பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது என்றும் நித்தமும் இந்த ரோட்டில் குட்டிக்கரணமடித்து சென்று வரும் ஓட்டுனர்கள் புலம்புகிறார்கள்.
ஒருவேளை சென்னை அல்லது கடலூரில் பெய்தது போல் மழை பெய்திருந்தால் சாலை பள்ளங்களில் படகு சர்வீஸ் நடத்த மட்டுமே இந்த சாலை லாயக்காகியிருக்கும் என மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் பட்டுக்கோட்டை தொகு தியின் சட்டமன்ற உறுப்பினர் திரு. NR. ரெங்கராஜன் அவர்கள் சாலையை செப்பனிட்டுத் தருமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ள செய்தி இன்றைய [23.12.2015] தினத்தந்தி நாளிதழில் வெளிவந்துள்ளது.
SH 29 தஞ்சை சாலையை கிழக்கு கடற்கரை சாலை[ECR]யுடன் இணைக்கும் இந்த பிரதான சாலையை மாநில நெடுஞ்சாலைத்துறையும் மாவட்ட நிர்வாகமும் விரைந்து செப்பனிட்டுத் தருவதுடன் விரைவில் முற்றிலும் தரமான முறையில் புதிப்பித்து தர வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கை.
சாம்பிளுக்கு சில படங்கள்..
No comments:
Post a Comment