ஹவாலா வழக்கில் அத்வானி ராஜினாமா செய்து தாம் ஊழல் செய்யாதவர் என நிரூபித்தது போல மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பா.ஜ.க. எம்.பி. சத்ருகன் சின்ஹா வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் சத்ருகன் சின்ஹா பதிவு செய்துள்ளதாவது:
டெல்லி கிரிக்கெட் சங்க முறைகேடு தொடர்பாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மீது குற்றம்சாட்டி வரும் பாஜக எம்.பி. கீர்த்தி ஆசாத்தே தற்போதைய கதாநாயகன். ஊழலுக்கு எதிராகப் போராடும் நண்பர் கீர்த்தி ஆசாத் மீது பா.ஜ.க. கடுமையான நடவடிக்கை எடுக்குமேயானால் அது பூமராங் போல் திரும்பிவிடும். இதை அரசியல் ரீதியாக மத்திய நிதியமைச்சர் அணுக வேண்டுமே தவிர சட்ட ரீதியாக அல்ல. பாஜக மூத்த தலைவர் அத்வானி ஹவாலா வழக்கில் ராஜினாமா செய்த முன்மாதிரியைப் பின்பற்றி தன் மீதான குற்றச்சாட்டு தவறு என்பதை அருண்ஜேட்லி ராஜினாமா செய்துவிட்டு திரும்பி வர வேண்டும். இவ்வாறு சத்ருகன் சின்ஹா கூறியுள்ளார்.
No comments:
Post a Comment