Latest News

ரயில்வே தட்கல் டிக்கெட் கட்டணம் திடீர் உயர்வு ! நாளை முதல் அமலுக்கு வருகிறது


ரயில்வே தட்கல் டிக்கெட் கட்டணம் திடீரென உயர்ந்துள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு நாளை முதல் அமல்படுத்த உள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. தட்கல் முறையில் முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்டுகளின் கட்டணங்களை திடீரென ரயில்வே துறை உயர்த்தியுள்ளது. அதன்படி தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில், தூரத்தைப் பொறுத்து, தட்கல் டிக்கெட்டுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.90 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.175 ஆகவும் இருந்தது. இது முறையே, ரூ.100 ஆகவும், ரூ.200 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

3-வது ஏ.சி.வகுப்புகளுக்கு தட்கல் கட்டணம் ரூ.250 லிருந்து ரூ.300 ஆகவும், 2-வது வகுப்பு ஏ.சி. எக்ஸிகியூட்டி வசதிகளுக்கு குறைந்தபட்ச தட்கல் கட்டணம் ரூ.300 லிருந்து ரூ.400 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஏ.சி. வகுப்பு கட்டணமும் உயர்த்தப்பட்டு உள்ளது. அதிகபட்சம் ரூ.100 வரை உயருகிறது. இந்த கட்டண உயர்வு, நாளை முதல் அமலுக்கு வருகிறது. இருப்பினும், இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட பெட்டிகளுக்கான தட்கல் டிக்கெட் முன்பதிவு கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை. அதில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.10 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.15 ஆகவும் நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.