இந்தியாவில் சிகரெட் பிடிக்கும் பெண்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்து வருவதாக ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் சிகரெட் உற்பத்தி மற்றும் புகை பிடிக்கும் பழக்கம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் சமீபத்திய புள்ளி விவரங்களை தாக்கல் செய்தது. அதில், 2014-15ம் ஆண்டில் 9,320 கோடி சிகரெட்டுகள் புகைக்கப்பட்டுள்ளதாகவும், இது 2012-13ம் ஆண்டை விட 1000 கோடி குறைவானதாகும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இதே காலகட்டத்தில் சிகரெட் உற்பத்தி 11,700 கோடியில் இருந்து 10,530 கோடியாக குறைந்துள்ளது. அதாவது, கடந்த 2 ஆண்டில் 10 சதவீதம் புகை பிடிக்கும் பழக்கும் சரிவடைந்துள்ளது.
இது நல்ல செய்தியாக இருந்தாலும், மறுபுறம் இந்தியாவில் சிகரெட் பிடிக்கும் பெண்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதாக அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வு முடிவு கவலை அளிக்கும் விதமாக உள்ளது. இதில், 1980ம் ஆண்டில் இந்தியாவில் 53 லட்சமாக இருந்த சிகரெட் பிடிக்கும் பெண்களின் எண்ணிக்கை, 32 ஆண்டில் அதாவது 2012ல் 1.27 கோடியாக உயர்ந்துள்ளது. பொதுவாக, உலக அளவில் ஆண்களை விட பெண்களிடம் சிகரெட் பிடிக்கும் பழக்கம் வேகமாக அதிகரித்து வருவதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment