சட்டப்பேரவை தேர்தலுக்காக கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கும் போது காங்கிரஸ் கட்சியை விலக்கமாட்டோம் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு கூறினார். ஜல்லிக்கட்டு குறித்த அறிவிப்புகள் மத்திய அமைச்சர்கள் மூலமாகவே வந்துகொண்டு இருப்பதாக கூறிய கருணாநிதி, மிக விரைவில் அதற்கான முறையான அறிவிப்பு மத்திய அமைச்சர்கள் மூலமாகவே வெளியிடப்படும் என்று நம்புவதாக கூறினார்.
3 ஆண்டுகள் தொடர்ந்து ஒரே பதிவியில் இருக்கும் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்ற தமிழக தேர்தல் அதிகாரியின் உத்தரவு குறித்த கேள்விகளுக்கு, ஜனநாயகம் இம்மியளவும் பழுதுபடாமல் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் பதிலளித்துள்ளார். தமிழகத்தில் தொழில் வளர்ந்திடவும், ஜனநாயகத்தை காப்பாற்றுவதிலும் எல்லா மாநிலங்களுக்கும் முன்னுதாரனமாக இருக்க வேண்-டும் என்று கருணாநிதி கூறினார். அதற்கேற்ற வகையில் தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நல்வாழ்வு கிடைக்கும் வகையிலும், பலதரப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையிலும் திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment