ஆளும் மத்தியஅரசு புதிய விமானப்போக்குவரத்து கொள்கையை அறிமுகப்படுத்த உள்ளது.கொள்கையில் என்ன உள்ளது என்பது பற்றியெல்லாம் நாம் கவலைப்படத் தேவையில்லை.சத்தியமாய் அது தனியார் விமானநிலையங்கட்கு (குறிப்பாக டெல்லி, பம்பாய் மற்றும் கேரளா) மட்டும்தான் சாதகமாய் இருக்கும்.திருச்சிபோன்ற இரண்டாம்நிலை நகர விமானநிலையங்கட்கு (தமிழனுக்கு) சாதமாய் இருக்காது. ஆனாலும் பொதுமக்களாகிய நாம் நம்முயற்சியை கைவிடக்கூடாது.
குறிப்பாக வளைகுடா வாழ் தமிழர்கள் இவ்விசயத்தில் தமது கருத்துக்களை அழுத்தமாக மத்தியஅரசுக்கு தெரிவிக்கும் நேரமிது.
குவைத்தில், குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) மற்றும், பஹ்ரைனில், பஹ்ரைன் தமிழ்ச் சங்கமும் கடந்த ஓராண்டாக அதி தீவிரமாக திருச்சிக்கு நேரடி விமான சேவை என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.வளைகுடாவைச் சேர்ந்த மற்ற நாட்டு தமிழர்களும் சுறுசுறுப்பாய் இயங்கவேண்டிய நேரமிது. வளைகுடாவைச் சேர்ந்த அனைத்து விமானநிறுவனங்களுமே (குறிப்பாக எமிரேட்ஸ், பிளைதுபய் மற்றும் ஓமன் ஏர்) திருச்சிக்கு விமானசேவை தொடங்கத் தயாராக உள்ளன. மத்திய அரசுதான் இவற்றிற்கு தோடர்ந்து 5 வருடங்கட்கு மேலாக அனுமதி மறுத்து வருகின்றது.
அதேபோல் திருச்சி போன்ற இரண்டாம் நிலை நகர விமானநிலையங்களின் வளர்ச்சியை நிரந்தரமாக முடக்கி பெருநகரங்களின் தனியார் விமானநிலையங்கட்கு (டெல்லி, மும்பை மற்றும் கேரளா) சாதகமாக இருக்கும்படிதான் புதியவிமாப் போக்குவரத்து திட்ட வரைவு அறிக்கையும் உள்ளது. அதையே வரும் படஜட் கூட்டத்தொடரில் வாக்கெடுப்புக்கு விடத்தயாராய் உள்ளது.மேலும் ஆளும் பாரதீயஜனதாவிற்கு தனிப்பெரும்பான்மை உள்ளதால், எதிர்க்கட்சிகள் என்னதான் காட்டுக்கத்தல் வரட்டுக்கத்தல் கத்தினாலும் வாக்கெடுப்பில் வெற்றிபெற்று முற்றிலும் தனியாருக்கு சாதகமான,இந்தியாவின் விமானத்துறை எதிர்கால வளர்ச்சிக்கு எதிரான,
திருச்சி போன்ற இரண்டாம் நிலை நகர விமானநிலையங்கட்கு எதிரான,புதிய விமானப்போக்குவரத்துக் கொள்கை நிறைவேற்றப்பட்டுவிடும்.
அப்புறம் இப்போது உள்ளபடியே,தமிழர்கள்,திருவனந்தபுரத்திற்கும்,கொச்சிக்கும்,பெங்களூருக்கும் சென்று பயனிக்கவேண்டியதுதான் திருச்சி மட்டுமல்ல,கோயம்புத்தூர் மற்றும் மதுரை விமானநிலையங்களின் எதிர்கால வளர்ச்சியையும் சேர்த்து மறந்துவிட வேண்டியதுதான்.அதேபோல,சென்னையும் சமீப காலத்தில் தனது "இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய உள்நாட்டுப் பயனிகள் விமானநிலையம்" என்ற பெருமையை பெங்களூருவிடம் இழந்து நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டது.அதுமட்டுமின்றி இன்னும் நிறைய பெருமைகளை பெங்களூருவிடமும் கொச்சினிடமும் இழக்கத் தயாராய் இருக்கிறது.விரைவில் இதுவும் இரண்டாம்நிலை நகர விமானநிலையமாய் ஆகிவிடும்.
ஒட்டுமொத்த தமிழர்களும்,குறிப்பாக வளைகுடா வாழ் தமிழர்கள் தங்களது ஒற்றுமையின் வலிமையைக் காட்டவேண்டிய நேரமிது.திருச்சிக்கு நேரடி விமானசேவையை வலியுறுத்தியும் திருச்சிக்கு நேரடி விமானசேவை வேண்டி அனுமதிக்கு காத்திருக்கும் வளைகுடா நாடுகளைச் சேர்ந்த விமானநிறுவனங்கட்கு அனுமதி அளிக்க வலியுறுத்தியும்,மத்தியஅரசின் சிவில் விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சகத்திற்கு மின்னஞ்சல் அனுப்பவும்
மின்னஞ்சல் முகவரி
feedback-avpolicy@gov.in
இறுதி நாள்.
31/12/2015.
No comments:
Post a Comment