மழையால் தத்தளிக்கும் சென்னை மக்களை காப்பாற்ற, நிவாரண பொருட்களோடு, இந்திய கடற்படை கப்பல் விரைந்து கொண்டுள்ளது. இன்று மாலை அது சென்னை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் பெய்து வரும் வரலாறு காணாத மழையால், மக்கள் தத்தளித்துள்ளனர். ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடம் போக முடியவில்லை. இந்நிலையில் மக்களை மீட்டு காப்பாற்ற இந்திய கடற்படையின் ஐஎன்எஸ்
எரவத் கப்பல் இன்று மாலை சென்னை வருகிறது. விசாகப்பட்டிணம் கடற்படை தளத்தில் இருந்து அந்த கப்பல் புறப்பட்டு தற்போது சென்னை நோக்கி வந்து கொண்டுள்ளது. இன்று மாலை அக்கப்பல் சென்னை வந்தடையும். இந்த கப்பலில், 20 நீச்சல் வீரர்கள், 5 ஜாமினி வகை படகுகள், உணவு, மருந்து உள்ளிட்ட நிவாரண பொருட்கள் உள்ளன.
No comments:
Post a Comment