சென்னையில் டிசம்பர் மாதத்தில் சராசரியாக பெய்யும் மழையைவிட அதிக அளவு மழை நேற்று ஒரு நாளில் மட்டும் பெய்துள்ளது. இதன் மூலம் சென்னையில் மழை 100 ஆண்டு கால சாதனையை முறியடித்துள்ளது. வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்தது. இதனால் சென்னை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்கள் மீண்டும் வெள்ளத்தில் மிதக்கின்றன.
சென்னையில் மழை நேற்று புதிய சாதனை வேறு படைத்துள்ளது.
புதிய சாதனை நேற்று மட்டும் சென்னையில் அதுவும் 12 மணிநேரத்தில் 272 மிமீ மழை பெய்துள்ளது. இதன் மூலம் 24 மணிநேரத்தில் அதிக மழை பெய்த 100 ஆண்டு கால சாதனையை தற்போதைய மழை முறியடித்துள்ளது.
1901ம் ஆண்டு முன்னதாக 1901ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் தேதி 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக 261.6 மிமீ மழை பெய்துள்ளது. மேலும் 1910ம் ஆண்டுக்கு பிறகு தற்போது தான் சென்னையில் டிசம்பரில் அதிக மழை பெய்துள்ளது.
மேலும் மழை சென்னையில் மேலும் 48 மணிநேரத்திற்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மழை விஷயத்தில் சென்னை மேலும் பல சாதனையை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment