குட்டைப்பாவாடை, ஜீன்ஸ் போன்ற ஆடைகள் அணிந்து வருபவர்களை இந்து கோயில்களில் அனுமதிக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், அக்கியம்பட்டியைச் சேர்ந்த ராஜு என்பவர், அங்குள்ள விநாயகர் கோயில் திருவிழாவுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும், கலைநிகழ்ச்சி நடத்த அனுமதிகோரியும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி, கோவிலின் புனிதம் காக்கப்பட வேண்டும் என்பதால் கோவிலுக்கு வரும் ஆண்கள் வேட்டி, மேல்துண்டு போன்ற ஆடைகளையும், பெண்கள் சேலை, தாவணி, சுடிதார் போன்ற உடலை மறைக்கும் ஆடைகளை அணிந்துவர வேண்டும் என்று உத்தரவிட்டார்.
குட்டைப்பாவாடை, ஜீன்ஸ் போன்ற ஆடைகள் அணிந்து வருபவர்களை கோவிலுக்குள் அனுமதிக்க கூடாது என்று நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.
ஜனவரி ஒன்றாம் தேதி முதல் அனைத்து கோவில்களிலும் இதனை அமல்படுத்த அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் கூறினார்.
No comments:
Post a Comment