நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் சொத்துகளை அபகரித்ததாக பா.ஜ.க.வின் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் துணைத் தலைவரும் அவரது மகனுமான ராகுல் காந்தியும் டெல்லி பெருநகர நீதிமன்றத்தில் இன்று ஆஜராகி ஜாமீன் பெற்றனர். அப்போது இருவரது பாஸ்போர்ட்டுகளை முடக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி முன்வைத்த கோரிக்கையை நீதிபதி லாவ்லின் நிராகரித்தார். இவ்வழக்கின் அடுத்த கட்ட விசாரணை பிப்ரவரி 20-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரதமராக ஜவஹர்லால் நேரு இருந்த போது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக தொடங்கப்பட்டது நேஷனல் ஹெரால்டு பத்திரிகை. பின்னாளில் பலத்த நஷ்டத்தை சந்தித்தது. இந்த நஷ்டத்தை சரிகட்ட அப்பத்திரிகை நிர்வாகம் சுமார் ரூ90 கோடி வரை கடன்களை பெற்றிருந்தது. இந்த கடன்களை தீர்க்க முடியாமல், அப்பத்திரிகை தவித்து வந்த நிலையில், சோனியா காந்தியும், அவரது மகன் ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான பணத்திலிருந்து கட்சி விதிமுறைகளை மீறி ரூ90 கோடியை அப்பத்திரிகைக்கு அளித்து, கடனை அடைத்தனர். இதற்கு பிரதிபலனாக ரூ2,000 கோடி மதிப்பிலான நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு சொந்தமான சொத்துகள் சோனியா, ராகுல் உள்ளிட்டோரை கொண்ட அறக்கட்டளைக்கு மாற்றப்பட்டது. இப்படி அறக்கட்டளைக்கு மாற்றியதில் சட்டவிதி மீறல் இருக்கிறது என்பது சுப்பிரமணியன் சுவாமி குற்றச்சாட்டு.
சு.சுவாமி வழக்கு இது தொடர்பாக டெல்லி நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார். சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொருளாளர் மோதிலால் வோரா, செயலாளர் ஆஸ்கர் பெர்னாண்டஸ், சுமன் துபே, சாம் பிட்ரோடா ஆகியோருக்கு எதிராக டெல்லி பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார். கோர்ட் உத்தரவு இந்த வழக்கில் சோனியாவும் ராகுலும் ஆஜராக டெல்லி பெருநகர நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. ஆனால் இருவரும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இந்த சம்மனை ரத்து செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்றம், இருவரையும் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டது. சோனியா, ராகுல் ஆஜர் இதையடுத்து டெல்லி பெருநகர நீதிமன்ற மாஜிஸ்திரேட் லாவ்லீன் முன் இன்று மாலை 3 மணிக்கு சோனியாவும் ராகுல் காந்தியும் ஆஜராகினர். 6 நிமிட விசாரணை இருவருக்கும் மூத்த காங்கிரஸ் தலைவர் கபில்சிபல் ஆஜராகி வாதாடினார். மொத்தம் 6 நிமிடங்களிலேயே இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்தது. நிபந்தனையற்ற ஜாமீன் சோனியா, ராகுல் உள்ளிட்டோருக்கு ரூ50,000 பிணைத் தொகையில் எந்த ஒரு நிபந்தனையுமே விதிக்காமல் ஜாமீன் வழங்கப்பட்டது. சோனியாவுக்காக முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. அந்தோணியும் ராகுல் காந்திக்காக பிரியங்கா காந்தியும் ஜாமீன் பத்திரத்தில் கையெழுத்திட்டனர்.
சு.சுவாமி கோரிக்கை நிராகரிப்பு இந்த விசாரணையின் போது, சோனியா, ராகுல் காந்தி ஆகியோர் வெளிநாட்டுக்கு தப்பி செல்லாமல் இருக்க அவர்களது பாஸ்போர்ட்டுகளை முடக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தினார். ஆனால் சுப்பிரமணியன் சுவாமியின் கோரிக்கையை நீதிபதி லாவ்லின் நிராகரித்தார். பிப்.20ல் விசாரணை இவ்வழக்கின் அடுத்த கட்ட விசாரணை பிப்ரவரி 20-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சோனியா, ராகுல் ஆஜரானதையொட்டி முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், சோனியா மகள் பிரியங்கா, மூத்த காங்கிரஸ் தலைவர்கள் குலாம்நபி ஆசாத், அகமது படேல், ஷீலா தீட்சித், அம்பிகா சோனி என பலரும் அங்கு குவிந்தனர். பலத்த பாதுகாப்பு அதேபோல் இன்று காலை முதலே ஏராளமான காங்கிரஸ் தொண்டர்களும் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் குவிந்திருந்தனர். அங்கு அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க பலத்த கமாண்டோ பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. குலாம்நபி வீட்டில் ஆலோசனை முன்னதாக குலாம்நபி ஆசாத் வீட்டில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பிரியங்கா காந்தியும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment