Latest News

மழை வெள்ளத்தில் ஆவணங்கள் தொலைந்து விட்டதா? உடனே கூப்பிடுங்க 7667100100


மழை வெள்ளத்தில் சொத்துப்பத்திரங்கள் ஆவணங்களை தொலைத்தவர்கள் உடனடியாக 7667100100 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் என்று சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தினர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர். இதற்காக கால் சென்டரை அவர்கள் தொடங்கியுள்ளனர். உயிரை மட்டும் விட்டு விட்டுவீட்டில் இருந்த அனைத்து பொருட்களையும் கபளீகரம் செய்து கொண்டு போய்விட்டது மழை வெள்ளம். வண்டி, வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் மூலம் பணம் பெற்றாலும், ரேசன் அட்டை, ஆதார் அட்டை, வீட்டு சொத்து பத்திரங்கள் என ஆவணங்களை தொலைத்தவர்கள் அவற்றை எப்படி மீட்பது என்று தெரியாமல் அழுது கொண்டிருக்கின்றனர். கழுத்தளவு வெள்ள நீரில் தவிப்புடன் வெளியேறும் மக்களிடம் மைக்கை நீட்டி அவர்களின் அவலங்களை வெளி உலகிற்கு ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டின.

ரேசன் கார்டுகள், சான்றிதழ்கள், காப்பீட்டு பாலிசிகள், வீட்டு சொத்து பத்திரங்கள், வங்கி பரிவர்த்தனை சான்றுகள் என வாழ்க்கையை நடத்திச் செல்லும் அடையாளங்கள் தண்ணீரோடு போய்விட்டது. எங்களுக்கு எல்லாமே இருக்கு... ஆனா இப்போ எதுவுமே இல்லை என்று கண்ணீரோடு வேதனையைச் சொல்கின்றனர் பலர். சொத்துப்பத்திரங்கள் ஆவணங்களை தொலைத்தவர்கள் உடனடியாக 7667100100 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் என்று ஒரு சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தினர் கூறியுள்ளனர். இதற்காக கால்சென்டரை தொடங்கியுள்ளனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.