தெலுங்கானா மாநிலம், கரீம் நகரில் பெற்றோர் உள்பட 24 பேரை கத்தியால் குத்திய இளைஞரை போலீசார் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெங்களுருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலை பார்த்து வந்த கரீம் நகரைச் சேர்ந்த 25 வயதான பல்வீந்தர் சிங், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் சர்வீஸ் தேர்வில் தோல்வியடைந்துள்ளார். இதனால் விரத்தியில் இருந்த பல்வீந்தர் சிங், திடீரென தனது பெற்றோரை கத்தியால் குத்தியுள்ளார். பின்னர் வீதிக்கு சென்ற அவர், வீதியில் சென்ற வாகனங்களை சேதப்படுத்தியுள்ளார். வீதியில் சென்றவர்களை கத்தியால் குத்தியுள்ளார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அவரை பிடிக்க முயன்றனர். பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்திய மடக்கி பிடித்தனர். துப்பாக்கி குண்டு பாயந்ததில் காயம் அடைந்த பல்வீந்தர் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இரண்டு போலீசார், பெற்றோர் உள்பட 24 பேரை பல்வீந்தர் சிங் கத்தியால் குத்தி தாக்கியுள்ளார் என்றும், அருகில் உள்ள பேருந்து நிலையத்திற்குள் அவர் நுழைந்திருந்தால் மேலும் பலர் காயமடைந்திருக்கக் கூடும், ஆகவே துப்பாக்கிச் சூடு நடத்தி அவரை மடக்கி பிடித்ததாக போலீசார் தெரிவித்தனர். பட்டப் பகலில் சினிமாவில் வரும் காட்சியைப் போன்று நடந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
No comments:
Post a Comment