அண்மைக்காலமாக நடைபெற்று வரும் மத ரீதியான வன்முறை சம்பவங்கள் தொடர்பாக கவலை தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
'மத ரீதியாக மக்களை பிளவுபடுத்துவது அணுகுண்டை விட மிகவும் ஆபத்தானது' என அதில் குறிப்பிட்டுள்ளனர்.
சென்னை கணித அறிவியல் நிறுவனம், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் ஐஐடிகள் உட்பட பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் சுமார் 130 விஞ்ஞானிகள் கையெழுத்திட்ட கடிதம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் அவர்கள் கூறியுள்ளதாவது:
மத ரீதியான வெறுப்புணர்வை வளர்த்து, மக்களை பிளவு படுத்தும் சம்பவங்கள் அண்மைக் காலங்களில் அதிகரித்துள்ளன. சகிப்புத்தன்மைக்கு எதிரான இந்த நிகழ்வுகள் காரணமாக அப்பாவி பொதுமக்களும் பகுத்தறிவாளர் களும் படுகொலை செய்யப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. பன்முக கலாச்சார சிறப்பும், பெருமையும் கொண்ட நமது நாடு, இதுபோன்ற சம்பவங்கள் காரணமாக பின் னோக்கி தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நமது நாட்டில் ஏராளமான சமூகங்கள், பழக்க வழக்கங்கள் இருந்தபோதிலும் அவற்றுக்கு உரிய இடமும் மதிப்பும் அளிக்கப் பட்டுள்ளது. இத்தனை வேறு பாடுகள் இருந்தாலும் மக்கள் பல நூற்றாண்டுகளாக ஒற்றுமை யுடனும் அமைதியுடனும் நல்லி ணக்கத்துடனும் வாழ்ந்து வரு கின்றனர். எல்லா தரப்பு மக்களின் நம்பிக்கைகளையும் கொண் டாடும் திருவிழாக்களும் பண்டிகை களும் மக்களால் உற்சாகமாக வும் மகிழ்ச்சியாகவும் கொண் டாடப்பட்டு வருகின்றன.
பல்வேறு வகைப்பட்ட மக்களின் சமூக, கலாச்சார இழைகள் பின்னிப் பிணைந்து உருவாக்கியுள்ள ஒற் றுமை உணர்வுதான், நமது நாட் டின் நாகரிக சிறப்புக்கு பெரும் வலிமையை தந்து கொண்டி ருக்கிறது. இந்த பெருமைக ளுக்கும், சிறப்புகளுக்கும் சில மதவெறியர்கள் மற்றும் அடிப்படை வாதிகளால் தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தும் முயற்சிகள் நடைபெறுகின்றன. மத ரீதியாக பிளவுபட்ட ஒரு சமூகம் என்பது, அணுகுண்டை விடவும் நமது நாட்டுக்கு மிகவும் ஆபத்தானது.
மாட்டிறைச்சி உண்பவர்கள், மூடநம்பிக்கைகளை எதிர்ப் பவர்கள், தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் கொல் லப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இதற்கான துரிதமான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
இந்தச் சூழலில் எல்லோரது நம் பிக்கைக்கும் மதிப்பளித்து சகிப்புத் தன்மையுடன் நடந்து கொள்ளு மாறு நாட்டு மக்களுக்கு நீங்கள் விடுத்த வேண்டுகோள் மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போதைய சூழ்நிலைகளை கருத்தில்கொண்டு தாங்கள் மேலும் உரிய நடவடிக் கைகளை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment