அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது என்று ஜெயலலிதா தெரவித்தார்
சென்னை நந்தம்பாக்கத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பேசியபோது, இந்தியாவில் வளர்ந்துவரும் மாநிலம் தமிழகம் என்றும், இந்தியாவின் பொருளாதாரத்தில் இரண்டாவது இடத்தில் தமிழகம் இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
மேலும், இந்த மாநாட்டில் ரூபாய் 1லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகள் உறுதி செய்யபட்டுள்ளன என்றும் முதலீடுகள் செய்ய வரவேற்கப்படுகிறது எனவும் கூறினார்.
மேலும், அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருப்பதாகவும், பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான அனைத்து வலுவான அடிப்படை வசதிகளையும் தமிழகம் பெற்றுள்ளது என்று கூறிப்பிட்டார்.
இந்த மாநாட்டில் பங்கேற்க 15 நாடுகளிலிருந்து ஆயிரம் முதலீட்டாளர்கள் வந்துள்ளார்கள் என்றும் நாடு முழுவதிலிருந்தும் 4 ஆயிரம் பேர் வந்து இருப்பதாக அவர் கூறியுள்ளார்.


No comments:
Post a Comment