டில்லியில், இரண்டு நேபாளப் பெண்களை அடைத்து வைத்து, கும்பலாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.
டில்லியின், குர்கான் எனும் இடத்தில் வசித்து வரும் சவுதி அரேபியத் தூதரின் அடுக்கு மாடிக் குடியிருப்பில் அடைத்து வைத்திருந்த தாய்(44) மற்றும் அவரது மகள்(20) ஆகிய இரண்டு பேரையும் திங்களன்று(07.09.2015) டில்லி காவல் துறை மீட்டுள்ளது. விசாரணையில், அவர்கள் ஒரு மாதத்திற்கு மேலாக அங்கு அடைத்து வைத்து, கும்பலாக பல பேர் சேர்ந்து மிரட்டி, பயமுறுத்தி,  பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது.   நேபாளத் தூதரகம், டில்லி காவல் துறைக்கு தெரிவித்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விசாரணையில், தூதரின் மனைவியே இதற்கு உடந்தையாய் இருந்து வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும், சவுதி அரேபியாவில் நல்ல வேலை வாங்கித் தருவதாக கூறி, அந்த இரண்டு பேரும் டில்லியில் ஒரு ஏஜெண்டிடம் 1 லட்சத்திற்கு விற்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. பிறகு அந்த தூதரிடம் விற்கப்பட்டார்கள். முதலில் சவுதி அரேபியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர்கள், சென்ற மாதம் டில்லிக்கு அழைத்துவரப் பட்டார்கள்.
இந்நிலையில்தான் டில்லி காவல் துறையால மீட்கப்பட்டுள்ளார்கள்.


No comments:
Post a Comment