சீனாவில் ஒரு தம்பதியினர் செல்லப்பிராணியாக வளர்க்க வாங்கிய நாய் நரியாக மாறியது அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
சீனாவின் குவாங்டாங் மாநிலத்தில் ஒரு தம்பதியினர் நாய் ஒன்றினை செல்லப்பிராணியாக வளர்ப்பதற்காக வாங்கியுள்ளனர். ஆனால் உண்மையில் அவர்கள் வங்கியது நாய் அல்ல நரி தான் என்பது அவர்களுக்கு அப்பொழுது தெரியாது. தாங்கள் வாங்கியது நரி தான் என்று தெரிந்ததும் அவர்களுக்கு அது அதிச்சியளித்தது. என ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த வாரம் மழைபெய்து கொண்டிருந்த போது அவரது வீட்டின் வெளியே உட்கார்ந்திருந்தது அந்த நரி இதனால் அதற்கு நடுக்கமாக இருக்குமென அவர்கள் நரிக்கு தங்குமிடம் வழங்க முடிவு செய்ததாக கூறுகின்றனர்.
அவரது மனைவி அந்த விலங்கை குளிப்பாட்டும் போது அதன் வால் நாயின் வால் போல் இல்லாமல் வித்தியாசமாக இருப்பதை கவனித்திருக்கிறார். அதன் பற்கள் மூர்க்கமாக காணப்பட்டது மேலும் அதை குளிப்பாட்டிய பிறகும் அதனிடம் ஒரு விதமான காரமான வாசனை வருவதையும் அவர் கவனித்திருக்கிறார்.
அந்த விலங்கு அவர்கள் அடைத்து வைத்திருந்த இரும்பு கூண்டிலிருந்து தப்பித்தது ஆனால் அதிர்ஷ்டவசமாக வீட்டின் பால்கனியில் அதை பிடித்துள்ளனர்.
அது நாய் அல்ல ஆர்க்டிக் நரி என்று விசாரணை அதிகாரி தெரிவித்தார். இதனால் அதை செல்ல பிராணியாக வளர்ப்பதற்கான முடிவை அந்த தம்பதியினர் கைவிட்டனர்.


No comments:
Post a Comment