நரேந்திரமோடி ஆட்சிக்கு வருவதற்கு முன் காட்டிய வீராவேசம் எங்கு போனது என்று தெரியவில்லை என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
புதுதில்லியில், காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட பேசிய சோனியா காந்தி, ”நாடாளுமன்றத் தேர்தலின் போது பிரதமர் நரேந்திர மோடி அளித்த எந்த ஒரு வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. ஆட்சிக்கு வருவதற்கு முன் காட்டிய வீராவேசம் எங்கு போனது என்றும் தெரியவில்லை.
பிரதமரிடம் பேச்சுமட்டும்தான் இருக்கிறது. செயல்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்து விட்டன. மோடியின் அரசு அனைத்து வகைகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. பேசுவதில் தான் மோடி சாதனை புரிந்துள்ளார்.
இந்துத்துவா அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.இன் கைப்பாவையாக மோடி அரசு செயல்பட்டு வருகிறது. ஆர்.எஸ்.எஸ். கட்டளைப்படிதான் மோடி அரசு செயல்படுகிறது என்பது அம்பலமாகி விட்டது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஊடகங்களை அச்சுறுத்துகிறது. ஏதோ ஒரு காரணம் கூறி ஊடகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி மிரட்டல் விடுக்கிறது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.


No comments:
Post a Comment