சீனாவில், தன் தலைக்குள், மூளையின் அருகே இருந்த ஊசி பற்றியே தெரியாமல் ஒரு பெண்மனி, 46 வருடங்களாக வாழ்ந்து வந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில், லியு கா என்ற 48 வயது பெண்மணிக்கு அடிக்கடி தலைவலி வருமாம். பலமுறை அவர் மருத்துவப் பரிசோதனை செய்து பார்த்தார். எல்லாம் சரியாக இருக்கிறது என்று மருத்துவர்கள் கூறி விட்டனர். ஆனால் தலையில் ஏற்படும் வலி, தன் உடல் முழுவதும் பரவுவது போலவும், தன் மண்டைக்குள் யாரோ ஊசியால் குத்துவது போலவும் உணர்வதாக அவர் கூறியிருக்கிறார்.
அதனால், மருத்துவர்கள் அவரின் தலையை, அதாவது அவரது மூளையை எக்ஸ்ரே எடுத்துப்பார்த்த போது, அவரின் மூளை அருகே 4.6 செ.மீ. அளவில் ஒரு ஊசி ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அது அவர் 18 மாத குழந்தையாக இருந்தபோதே அவர் தலைக்குள் சென்றிருக்கிறது என்பதை கண்டுபிடித்தனர். அதாவது 46 வருடங்களாக அந்த ஊசியோடு அவர் வாழ்ந்திருக்கிறார்.
ஆனால், அவருக்கோ அந்த ஊசி எப்படி தன் தலைக்குள் போனது என்பது பற்றி தெரியவில்லை. அவர் மகளுக்கும் அது பற்றி ஒன்றும் தெரியவில்லை. அவர் குடும்பத்தில் இருக்கும் வயது முதிர்ந்தவர்களுக்கும் அந்த ஊசி பற்றி எதுவும் தெரியவில்லை.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் “கொஞ்சம் ஆபத்து என்றாலும், அறுவை சிகிச்சை மூலம் அந்த ஊசியை வெளியே எடுக்க முடிவெடுத்திருக்கிறோம். ஏனெனில் இந்த ஊசி, எதிர்காலத்தில் பொறுத்துக்கொள்ள முடியாத வலியை அவருக்கு ஏற்படுத்தலாம் ” என்று கூறியுள்ளனர்.


No comments:
Post a Comment