பீகார் மாநில சட்டசபை தேர்தல் அக்டோபர் 12 ஆம் தேதி முதல் நவம்பர் 5 ஆம் தேதி வரை 5 கட்டங்களாக நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், பீகாரில் 243 சட்டசபை தொகுதிகளில் 6.68 கோடி பேர் வாக்களிக்க தகுதியானவர்கள். இம்மாநிலத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் புகைப்படங்கள் முதல் முறையாக இடம்பெறுகிறது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 47 தொகுதிகளில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் இருப்பதாகவும்,தேர்தலின் போது அனைத்து தொகுதிகளிலும் துணை ராணுவம் பாதுகாப்புக்கு நிறுத்தப்படும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகிறது என்று தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி தெரிவித்துள்ளார்.
முதல் கட்ட தேர்தல் அக்டோபர் 12 ஆம் தேதியன்று 49 தொகுதிகளுக்கும், 2 வது கட்டமாக அக்ட்போபர் 16 ஆம் தேதியன்று 32 தொகுதிகளுக்கும், 3 வது கட்டமாக அக்டோபர் 28 ஆம் தேதியன்று 50 தொகுதிகளுக்கும்,
4 வது கட்டமாக நவம்பர் 1 ஆம் தேதியன்று 55 தொகுதிகளுக்கும்,5வது கட்டமாக நவம்பர் 5 ஆம் தேதியன்று 57 தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெறும்.
வாக்கு எண்ணிக்கை நவம்பர் 8 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
பீகாரில் 2010 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதாவும் தற்போதைய முதல்வரான நிதிஷ்குமார் கட்சியின் ஐக்கிய ஜனதா தளமும் இணைந்து ஆட்சி அமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கடந்த ஆண்டு லோக்சபா தேர்தலின் போது இந்த கூட்டணி முறிந்தது. தற்போது ஐக்கிய ஜனதா தள அரசுக்கு லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி ஆதரவு அளித்து வருகிறது.


No comments:
Post a Comment