இலங்கையின் பிரதமராக 4வது முறையாக ரணில் விக்கிரமசிங்கே நாளை காலை பதவி ஏற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் முழுமையாக நடைபெற்று வருகின்றன. இலங்கையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி அதிக இடங்களை பிடித்தது. அவரது கட்சிக்கு மொத்தம் 106 இடங்கள் கிடைத்தன. பெரும்பான்மைக்கு மேலும் 7 உறுப்பினர்கள் தேவை.
தற்போது அதிபர் சிறிசேனவின் சுதந்திர கட்சியும் ரணிலின் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து தேசிய அரசை அமைக்க முன்வந்துள்ளது. ரணிலுடன் இணைந்து 2 ஆண்டுகளுக்கு சிறிசேனவின் சுதந்திர கட்சி செயல்படுவது என முடிவு செய்துள்ளது. மேலும் அமைச்சரவையில் யார் யார் இடம் பெறுவது என்பது குறித்து முடிவு செய்ய முன்னாள் அதிபர் சந்திரிகா தலைமையில் 7 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்கே நாளை காலை பிரதமராக பதவியேற்க உள்ளார். அவருக்கு அதிபர் சிறிசேன பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். கடந்த 1993, 2001, 2015ஆம் ஆண்டுகளில் பிரதமராக பதவி வகித்தவர் ரணில். தற்போது 4வது முறையாக பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
No comments:
Post a Comment