நடிகர் சங்கத்திற்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் நடிகர் சரத்குமார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து பேசியுள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் நடிகர் சங்க தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ளார் சரத்குமார். எதிர் அணி சார்பில் நடிகர் விஷால் போட்டியிடக்கூடும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் சரத்குமார் வியாழக்கிழமை காலை சென்னை போயஸ் கார்டனில் உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வீட்டிற்கு சென்றார். அங்கு அவர் ரஜினியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணிநேரம் நீடித்தது. இந்த சந்திப்பு குறித்து சரத்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் ரஜினிகாந்தை சந்தித்து பேசினேன். அவர் நடிக்க உள்ள கபாலி படம் பற்றியும், அதற்காக அவர் வெளிநாடு செல்ல உள்ளது பற்றியும் அவரிடம் விவரம் கேட்டேன். மேலும் தமிழ் திரையுலகின் தற்போதைய பிரச்சனை குறித்தும், நடிகர் சங்க தேர்தல் குறித்தும் பேசிக் கொண்டிருந்தோம் என்றார்.
No comments:
Post a Comment