ஐ.பி.எல்.கிரிக்கெட் முறைகேட்டில் ஈடுபட்ட அதன் முன்னாள் தலைவர் லலித்மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்புவதற்காக ஆதரங்கள் அடங்கிய ஆவணங்களை சர்வதேச காவல் அமைப்பிற்கு சி.பி.ஐ. அனுப்பி உள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளுக்கான நிதியில் முறைகேடு செய்ததாக ஐ.பி.எல்.தலைவராக இருந்த லலித் மோடிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு, இது குறித்து சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.
இந்நிலையில் லலித்மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்புவதற்காக ஆதரங்கள் அடங்கிய ஆவணங்களை இண்டர்போல் என்ற சர்வதேச காவல் அமைப்பிற்கு சி.பி.ஐ அனுப்பி உள்ளது. பல்வேறு புகார்களில் சிக்கிய லலித்மோடி தலைமறைவாக லண்டனில் வசித்து வருகிறார். தலைமறைவாக இருக்கும் லலித் மோடிக்கு சிங்கபூரில் இருக்கும் சொந்தமான கம்பெனிகளின் இரண்டு வங்கி கணக்குகளை அமலாக்கப்பிரிவு சமீபத்தில் சீல் வைத்தது குறிப்பிடத்தக்கது. சி.பி.ஐ. யின் அடுத்தகட்ட நடவடிக்கையால் லலித்மோடிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
No comments:
Post a Comment