
சென்னை: 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எப்படி
நடத்தப்பட வேண்டும் என்பது குறித்த வழிமுறைகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை
அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என
கடந்த செப்டம்பர் மாதம் அரசு அறிவித்தது. இதற்காக அரசாணையும் தமிழக அரசு
வெளியிட்டது.
இந்நிலையில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எப்படி
நடத்தப்பட வேண்டும் என்பது குறித்த வழிமுறைகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை
அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
5 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு மையம் 1 கிலோமீட்டர் தொலைவுக்குள்ளாக
இருக்க வேண்டும்.
8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு மையம் 3 கிலோமீட்டர் தொலைவுக்குள்ளாகவும்
இருக்க வேண்டும்.
5 ஆம் வகுப்புக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய மூன்று பாடங்களுக்கு
மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்படும்.
8 ஆம் வகுப்புக்கு தமிழ், ஆங்கிலம், அறிவியல், கணிதம், சமூக அறிவியல்
என 5 பாடங்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும்.
மொத்தம் 60 மதிப்பெண்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்படும்.
மீதமுள்ள 40 மதிப்பெண்கள் மாநில பாடத்திட்டத்தின் முப்பருவ முறையை
பின்பற்றப்படும். இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment