ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தாதா தாவூத் இப்ராகிம் குவித்து வைத்துள்ள சொத்துக்களை முடக்கவும், அவருடைய பினாமி சொத்துக்களை முடக்கவும் அமீரக தலைவர்களிடம் பிரதமர் மோடி முக்கியமாக கோரிக்கை வைக்கவுள்ளாராம். அவரது பயணத்தின் இன்னொரு முக்கிய நோக்கம் இதுதான் என்கிறார்கள். அபுதாபிக்கு நேற்று விஜயம் செய்த பிரதமர் மோடி இன்று துபாய் போயுள்ளார். அமீரகத்திற்கு 34 ஆண்டு காலத்தில் வருகை தந்துள்ள முதல் இந்தியப் பிரதமர் மோடிதான்.
பெருமளவிலான முதலீடுகளை கவரும் முக்கிய நோக்கத்தில்தான் மோடி இங்கு வந்துள்ளார். இதை தான் சந்தித்த முதலீட்டாளர்களிடமும் தெளிவாகத் தெரிவித்துள்ளார் மோடி. இந்த நிலையில் இன்னொரு முக்கிய குறிக்கோளும் மோடி பயணத்தில் அடங்கியுள்ளது. அது, தாவூத் இப்ராகிமுக்கு அமீரகத்தில் ஆப்பு வைப்பது என்பதாகும். இந்தியாவால் நீண்ட காலமாக தேடப்பட்டு வரும் தாவூத் இப்ராகிமுக்கு எமிரேட்ஸில் ஏகப்பட்ட சொத்துக்கள் உள்ளன. அவரது நெட்வொர்க்கும் இங்கு வலுவாகவே உள்ளது. அவரது பினாமி பெயர்களில் பெருமளவில் சொத்துக்களும் உள்ளன. இவற்றை முற்றாக முடக்க வேண்டும் என்ற கோரிக்கையை மோடி, அமீரகத் தலைவர்களிடம் வைக்கவுள்ளாராம். தாவூத் இப்ராகிமின் சொத்துக்கள் குறித்த விரிவான பட்டியலை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் தயாரித்துள்ளார். அவரும் மோடியுடன் அமீரகம் வந்துள்ளார். இந்தப் பட்டியலை அமீரகத் தலைவர்களிடம் மோடி அளித்து நடவடிக்கை எடுக்க கோரவுள்ளாராம். தாவூத் பெயரிலும், அவரு பினாமிகளின் பெயரிலும் உள்ள சொத்துக்களை முற்றாக முடக்கி வைக்குமாறு மோடி கோரிக்கை விடுக்கவுள்ளாராம். துபாயில் தாவூத்தின் தம்பி அனீஸ் இப்ராகிம் கோல்டன் பாக்ஸ் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை வைத்துள்ளார். தனது மைத்துனருடன் இணைந்து இதை நடத்தி வருகிறாராம்.
No comments:
Post a Comment