மேற்கு வங்க மாநில அரசு பொறியாளர் வீட்டிலிருந்து, 24 கோடி ரூபாய் மதிப்புள்ள, ரொக்கம் மற்றும் நகைகளை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றியுள்ளனர். பிரணாப் அதிகாரி என்ற அவர், ஹவுரா மாநகராட்சியுடன் இணைந்த பல்லி நகராட்சியில் உதவி பொறியாளராக பணியாற்றி வந்தார். அவர் லஞ்சம் வாங்கி சொத்துக்கள் குவித்து வருவதாக மேற்கு வங்க மாநில லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் பறந்தன.
இந்நிலையில், அவர் வீட்டை முற்றுகையிட்ட போலீசார், அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர். பிரம்மாண்ட அந்த வீட்டின் பல அறைகளில், 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள், கட்டுகட்டாக மறைத்து வைக்கப்பட்டிருந்தன. படுக்கையறை கட்டில்களின் ரகசிய இடங்கள், தரையில் டைல்ஸ்களுக்கு அடியில் தங்கம், வைரம், பிளாட்டின நகைகள், வங்கிகளின், நிரந்தர வைப்பு பத்திரங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இவற்றின் மதிப்பு, 24 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் கணக்கிட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு மொத்தம் சுமார் 20 மணி நேரம் ஆனது. லஞ்சம் வாங்கியே இவ்வளவையும் சேர்த்ததாக, அந்த அதிகாரி வாக்குமூலம் அளித்ததை அடுத்து, அவரையும், பொறியியல் படித்து வந்த அவரின் மகனையும் போலீசார் கைது செய்தனர்.
No comments:
Post a Comment