4 பயணிகளுடன் சென்ற இந்தோனேசிய விமானம் ஒன்று பப்புவா மாகாணம் அருகே மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. பப்புவா தலைநகர் ஜெயபுராவில் இருந்து 54 பயணிகளுடன் டிரிகானா ஏர் ஏடிஆர் 42 என்ற விமானம் புறப்பட்டது. ஓக்சிபில் நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்த விமானம் உள்ளூர் நேரப்படி இன்று மதியம் 3 மணியளவில் பப்புவா அருகே பறந்து கொண்டிருந்த போது ரேடாரில் இருந்து திடீரென மறைந்தது.
மாயமான விமானத்தை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாயமான விமானத்தில் 5 குழந்தைகள் மற்றும் 5 விமான ஊழியர்கள் உட்பட 54 பேர் இருந்தனர். விமானம் மாயமான தகவலை அந்நாட்டு போக்குவரத்துத் துறை அமைச்சர் உறுதி செய்துள்ளார். விமானம் மாயமான பகுதியில் தற்போது மோசமான வானிலை நிலவுகிறது. கருமேகங்கள் சூழ்ந்து இருப்பதால் தேடும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விமானம் மாயமான பகுதி மலைப்பகுதி ஆகும். எனவே மலைப்பகுதியில் விமானம் மோதி விழுந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் அடுத்தடுத்து மலேசியன் ஏர்லைன்ஸ் விமானங்கள் பெரும் சோதனையைச் சந்தித்தன. இந்த நிலையில் இந்தோனேசிய விமானம் ஒன்று மாயமாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏர் ஏசியா விமானம் ஒன்று இந்தோனேசியாவின் சுரபயா நகரிலிருந்து கிளம்பி சிங்கப்பூருக்குப் போய்க் கொண்டிருந்தபோது, ஜாவா கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. அதில், 162 பேர் பலியானார்கள் என்பது நினைவிருக்கலாம்.
No comments:
Post a Comment