அதிரை மேலத்தெருவை சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து '31 சங்கம்' என்ற பெயரில் புதிய அமைப்பை துவக்கி, கிடைக்கும் பயனுள்ள நேரங்களை பொதுநலப்பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி வருகின்றனர்.
புனிதமிக்க ரமலான் மாதத்தில் அதிரையின் பலவேறு இடங்களில் இஃப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இநிலையில் மேலத்தெரு இளைஞர்கள் சார்பில் இன்று மாலை மேலத்தெரு பூங்காவில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இளைஞர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இஃப்தார் நிகழ்ச்சி முடிந்தவுடன் மஹ்ரிப் தொழுகை நடந்தது. இதில் அனைவரும் கலந்துகொண்டனர்.
செய்தி மற்றும் படங்கள்:
கே. அப்துல் வஹாப் ( உஜாலா )
நன்றி : அதிரைநியூஸ்










No comments:
Post a Comment