சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு நாளை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யாது என்று அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து ஜெயலலிதா தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய கர்நாடக அரசு முடிவு செய்தது.
கர்நாடக அரசு நாளை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இது குறித்து கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில், ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்வது குறித்த ஆவணங்கள் டெல்லியில் உள்ள கர்நாடக பவனிற்கு சரிபார்க்க அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆவணங்களின் நகல்களை தயாரிக்கவே 5 நாட்கள் ஆகக்கூடும். எனவே எப்பொழுது மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்வது என்று இன்னும் தீர்மானிக்கவில்லை. தற்போது உச்ச நீதிமன்ற விடுமுறையாக வேறு உள்ளது. அதனால் ஜூலை 1ம் தேதிக்கு பிறகு தான் மேல்முறையீடு செய்யக்கூடும் என்றார்.
No comments:
Post a Comment