இன்னும் பல சாதனைகளை படைக்கவேண்டுமென்று அருமை தம்பி முகமது ஆசிப்புக்கு TIYA வின் சார்பாக நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
அதிரையை சேர்ந்தவர் ஜெஹபர் சாதிக், 'அதிரை முஜீப்' என அனைவராலும் அழைக்கப்படுபவர். அமீரக ஷார்ஜாவில் உள்ள கட்டுமான நிறுவனமொன்றில் அலுவலராக பணியாற்றி வரும் இவர் குடும்பத்துடன் அங்கு வசித்து வருகிறார்.
இவரது மகன் முஹம்மது ஆஷிப். அங்குள்ள கல்ஃப் ஆசியன் ஆங்கிலப் பள்ளியில் கல்வி பயின்று வருகிறார். சமீபத்தில் பள்ளியில் 'என் அம்மா' என்ற தலைப்பில் நடந்த பேச்சுப்போட்டியில் இரண்டாம் இடம் பெற்று அதற்கான பாராட்டு சான்றிதழை பெற்றுள்ளார். மேலும் 'தொலைக்காட்சி' பற்றி எழுதிய விழிப்புணர்வு கட்டுரையும் சிறந்த கட்டுரையாக தேர்வு செய்து இந்த ஆண்டின் பள்ளி ஆண்டு மலரில் இடம்பெற உள்ளது. சாதனை படைத்த மாணவனை பள்ளி ஆசிரியர்கள் - சக மாணவர்கள் - பெற்றோர்கள் - உறவினர்கள் பாராட்டி வாழ்த்தினர்.
நன்றி : அதிரைநியூஸ்
No comments:
Post a Comment