Latest News

அதிரையில் கோலாகலமாக துவங்கியது கால்பந்தாட்ட தொடர் போட்டி: முதல் நாள் ஆட்டத்தில் பொதக்குடி அணி வெற்றி !



அதிரை வெஸ்டர்ன் ஃபுட் பால் கிளப் [ WFC ] நடத்தும் 8 ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டியின் முதல்நாள் ஆட்டம் இன்று [ 10-06-2015 ] மாலை நமதூர் மேலத்தெரு மருதநாயகம் மைதானத்தில் சிறப்பாக துவங்கியது.

இன்றைய முதல் ஆட்டத்தில் பட்டுக்கோட்டை பாளையம் அணியினரும், பொதக்குடி அணியினரும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் 3-1 என்ற கணக்கில் கோல் அடித்து பொதக்குடி அணியினர் வெற்றிபெற்றனர்.

முன்னதாக சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தாஜுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் எம்.எம்.எஸ் சேக் நசுருதீன், பி.எம்.கே தாஜுதீன், ம.செ ஜபருல்லாஹ், வி.டி தகளா மரைக்காயர் மற்றும் முன்னாள் கால்பந்தாட்ட வீரர்கள் ஆகியோர் வீரர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்து இன்றைய முதல் ஆட்டத்தை துவக்கி வைத்தனர்.

நிகழ்ச்சிகள் அனைத்தையும் முஹம்மது யூசுப் தொகுத்து வழங்கினார். ஆட்ட அம்பயராக கோஸ் முஹம்மது, அவருக்கு உதவியாக ஹாஜா நசுருதீன் ஆகியோர் சிறப்பாக பணிபுரிந்தனர்.

இன்றைய முதல் ஆட்டத்தைக்காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மைதானத்திற்கு திரளாக வருகை தந்து ரசித்தனர். நாளை ஆட்டமாக அதிரை WFC அணியினரோடு, அதிரை NFC அணியினர் மோத இருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

நாளைய ஆட்டம் சரியாக மாலை 4.30 மணிக்கு துவங்கும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த தொடரில் சாதனை நிகழ்த்தும் சிறந்த கால்பந்தாட்ட வீரர்களுக்கு சிறப்பு பரிசுகளை பல்வேறு நிறுவனங்கள் வழங்க காத்திருக்கின்றன.

செய்தி மற்றும் படங்கள்:
கே. அப்துல் வஹாப் ( உஜாலா )                     நன்றி . அதிரைநியூஸ்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.