பீகார் தேர்தல் மூலம் பாரதீய ஜனதா கட்சிக்கு தோல்வி ஆரம்பமாகி விட்டது என்று காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பூ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “பீகார் சட்டபேரவை தேர்தலில் பாஜக கூட்டணி படுதோல்வி அடைந்து உள்ளது. இதன் மூலம் பாரதீய ஜனதா கட்சிக்கு தோல்வி ஆரம்பமாகி விட்டது. இதற்கு பின்னர் பல தோல்விகளை சந்திக்க உள்ளது.
பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததும் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததுதான் இந்த தோல்விக்கு காரணம். தமிழகத்தில் சட்டசபை தேர்தலில் தீவிர பிரசாரம் செய்வேன். எங்கு பிரசாரம் செய்ய வேண்டும் என்று கட்சி மேலிடம் சொல்லும் போது பிரசாரம் செய்வேன்” என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment