வங்கதேசத்தில், பதின்ம வயதுச் சிறுவர்கள் இருவரை கொலை செய்ததற்காக, 6 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
வெவ்வேறாக இடம்பெற்ற இவ்விரண்டு சம்பவங்களும், அங்கு தேசிய மட்டத்தில் மக்களை சீற்றத்திற்கு உள்ளாக்கியிருந்தன.
திருடியதாக குற்றஞ்சாட்டி, 13 வயது சிறுவனை அடித்துக் கொன்ற நான்கு பேரை, ஷில்ஹெட் இல் உள்ள நீதிமன்றம் ஒன்று குற்றவாளிகளாக அறிவித்துள்ளது.
வீடியோவாக பதிவு செய்யப்பட்ட அந்த தாக்குதல் இணையத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்தது.
குல்னாவில் நடந்த இரண்டாவது சம்பவத்தில், மற்றொரு 13 வயது சிறுவனுக்கு, முதலாளியை விட்டு வேறு தொழில் தேடி சென்றதற்காக உடலினுள் உயர் அழுத்தக் குழாய் மூலமாக காற்றடித்து கொலைசெய்ததற்காக, இரண்டு பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment