சைக்கோ போல நடந்து கொண்டு பாலியல் தேவைகளை பூர்த்தி செய்ய வற்புறுத்தியதால் கணவனை கொலை செய்தேன் என்று கொலையான பெங்களூர் கம்ப்யூட்டர் இன்ஜினியர் மனைவி ஷில்பா போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். பெங்களூர் பானசவாடியில் மனைவி ஷில்பாவுடன் வசித்தவர் கேசவ் ரெட்டி. லாங்க்போர்ட் டவுனிலுள்ள Actiance India Limited என்ற நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வந்தார். இவரது சொந்த ஊர் ஆந்திர மாநிலம் மதனப்பள்ளியாகும்.
சடலம்
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலார் மாவட்டம் சீனிவாசபூர் ஏரியில் கேசவ் ரெட்டி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது ஐடி கார்டை வைத்து, போலீசார் அடையாளம் கண்டு கொண்டனர். கேசவ் ரெட்டியின் தலையில் இரும்பு ஆயுதத்தால் தாக்கிய காயத் தழும்பு இருந்தது. கேசவ் ரெட்டியின் சகோதரர், திருமலா இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார்.
செல்போன் காட்டி கொடுத்தது இந்நிலையில், வழக்கில் திடுக்கிடும் திருப்பமாக, கொலை வழக்கில், கேசவ் ரெட்டி மனைவி ஷில்பா கைது செய்யப்பட்டார். கேசவ் ரெட்டி சடலமாக கண்டெடுக்கப்பட்ட ஏரி பகுதியில் ஷில்பாவின் செல்போன் நெட்வொர்க் பதிவானதை வைத்து போலீசார் கைது செய்தனர். அப்போது தூக்க மாத்திரை கலந்து கொடுத்து, மயக்கமடையச் செய்து பிறகு இரும்பு கம்பியால் தலையில் அடித்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார் ஷில்பா.
கள்ளத்தொடர்பா? அத்தை மகன் வாசுதேவ் என்பவருடன் கொண்டிருந்த கள்ளக் காதலால்தான், கேசவ் ரெட்டியை ஷில்பா கொலை செய்ததாக வாசுதேவ் குடும்பத்தார் குற்றம்சாட்டினர். இந்நிலையில், ஷில்பாவோ வேறு மாதிரியான வாக்குமூலத்தை போலீசாரிடம் அளித்துள்ளார்.
டார்ச்சர் இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: எனது கணவர் கேசவரெட்டிக்கு பணம் மீது அதிக மோகம் இருந்தது. இதனால் அவர் வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார். என்னை வீட்டில் இருந்து வெளியே விடாமல், வீட்டிற்குள்ளே சிறைவைத்திருந்தார். மேலும் அவர் எந்த நேரத்தில் வீட்டிற்கு வந்தாலும், உடலுறவு அனுபவிக்க என்னை கட்டாயப்படுத்தி வந்தார். அதுமட்டுமல்லாமல் நான் யாரிடமாவது பேசினால், அவர்களுடன் எனக்கு தொடர்பு இருப்பதாக கூறி ‘சைக்கோ‘ போல் கொடுமைப்படுத்தி வந்தார். அதேபோல் செல்போனில் பேஸ்புக், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூகவலைதளங்களை பயன்படுத்தவும் என்னை அனுமதிப்பதில்லை.
அக்கா-தம்பி எனது தந்தை வீட்டில் என்னுடன் வளர்ந்தவர் வாசுதேவா ரெட்டி. இவரும் நானும், அக்காள், தம்பி போல் பழகி வந்தோம். அதனால் அவர் எனது வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றார். ஆனால் எனது கணவர், எனக்கும், வாசுதேவா ரெட்டிக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டார். பாலியல் தொல்லை, நடத்தையில் சந்தேகம் என பல்வேறு கொடுமைகளை செய்து வந்தார். இந்த கொடுமை நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் கணவர் கேசவரெட்டி மீது எனக்கு வெறுப்பு அதிகரித்தது. அதனால் கணவரை கொலை செய்ய திட்டமிட்டேன். இரும்பு கம்பியால் தாக்கினேன்.
கொலை அதன்படி கடந்த 6ம் தேதி இரவு வீட்டிற்கு வந்த கேசவரெட்டிக்கு பாலில் அளவுக்கு அதிகமாக தூக்கமாத்திரை கலந்துகொடுத்தேன். அந்த பாலை குடித்ததும் அவர் தூங்கிவிட்டார். அப்போது நான் இரும்பு கம்பியால் கேசவரெட்டியின் தலையில் அடித்து கொன்றேன். அதன்பிறகு எனது தந்தை ராமச்சந்திரா ரெட்டி, உறவினர் வாசுதேவ் உதவியுடன் கணவரின் உடலை, காடிரோலகத்த கிராமம் அருகே உள்ள ஏரிக்கரையில் வீசினேன். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
No comments:
Post a Comment