கீழக்கரை – ராமநாதபுரம் செல்லும் சாலையில் துணை மின் நிலையம் அருகே 3 ஏக்கர் நிலத்தை அரசுக்கு இலவசமாக தர கீழக்கரை தொழிலதிபர் செய்யது எம் சலாஹுதீன் தர முன்வந்தார். இதனை அரசாங்கம் ஏற்று கொண்ட நிலையில் நேற்று தாசில்தார் கமலாபாய் முன்னிலையில் தொழிலதிபர் சலாஹுதீனும் பங்கேற்று தாலுகாவுக்கன இடத்தை ஒப்படைப்பதற்கு வேண்டிய எழுத்துபூர்வமான பணிகள் கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிலையில் இன்று 08/05 காலை ராமநாதபுரத்தில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நந்தகுமாரை சந்தித்த தொழிலதிபர் சலாஹுதீன் முறைப்படி இடம் வழங்குவதற்கான ஆவணங்களை கலெக்டர் முன்னிலையில் ஒப்படைத்தார்.
இந்நிகழ்வில் தாசில்தார் கமலாபாய்,நகராட்சிதலைவர் ராவியத்துல் கதரியா,கவுன்சிலர் முஹைதீன் இப்ராஹிம் ,இக்பால் ,ரிஸ்வான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மக்கள் நல் பணிக்காக இடம் வழங்கிய சலாஹுதீனுக்கு மாவட்ட கலெக்டர் பாராட்டு தெரிவித்ததோடு விரைவில் தாலுகா அலுவலகம் அமைக்கும் பணிகள் தொடங்கும் என தெரிவித்தார்.
முன்னதாக கவுன்சிலர் முஹைதீன் இப்ராஹிம் தொழிலதிபர் சலாஹுதீனுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்
இது குறித்து சேர்மன் ராவியத்துல் கதரியா கூறியதாவது ,
மக்கள் நலனுக்க்காக 5கோடிக்கு மேல் பெறுமானமுள்ள சொத்தை அரசாங்கத்திற்கு தர முன் வந்த சலாஹுதீன் காக்காவிற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்வதோடு தங்களின் இடத்தையும் பயன்படுத்தி கொள்ளலாம என மற்றொரு இடத்தை இலவசமாக தர முன் வந்த மறைந்த சே மு ஹமீது அப்துல் காதர் காக்கவிற்கு சதக் அறக்கட்டளையினருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
நன்றி
கீழக்கரை டைம்ஸ்
No comments:
Post a Comment