உலக அளவில் குற்ற வழக்குகளை புலனாய்வு செய்வதில் கில்லாடியாக விளங்கிய ஸ்காட்லாந்து போலீசின் தலைமையகத்தை விலை கொடுத்து வாங்க இந்தியவை சேர்ந்தவர், ஐக்கிய அரபு எமிரேட்சில் குடியிருப்பவருமான யூசுப் அலி தீவிரமாக முயன்று வருகிறார்.
வரலாற்று பூர்வமான ‘கிரேட் ஸ்காட்லாந்து யார்டு’ கட்டிடத்தில் இருந்து மத்திய லண்டனில் உள்ள ‘நியூ ஸ்காட்லாந்து யார்டு’ என்ற புதிய தலைமயகத்திற்கு ஸ்காட்லாந்து யார்டு தலைமையகம் மாற்றப்பட்டது. இதை தொடர்ந்து 1829 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ‘கிரேட் ஸ்காட்லாந்து யார்டு’ கட்டிடத்தை 5 நட்சத்திர ஓட்டலாக கட்ட முடிவு செய்யப்பட்டது. முதலாம் உலக போருக்கான ராணுவ வீரர்களை தேர்வு செய்வதில் ‘கிரேட் ஸ்காட்லாந்து யார்டு’ கட்டிடம் முக்கிய பங்கு வகித்துள்ளது.
இவ்வளவு சிறப்பு மிக்க இக்கட்டிடத்தை 5 நட்சத்திர ஓட்டலாக மாற்ற கால்லியர்டு குழுமம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு 125 ஆண்டு கால குத்தகைக்கு ‘கிரேட் ஸ்காட்லாந்து யார்டு’ கட்டிடத்தை, கால்லியார்டு குழுமம் பெற்றுள்ளது. அக்கட்டிடத்தை 235 ரூம்கள் கொண்ட பிரம்மாண்ட ஓட்டலாக மாற்றி கால்லியார்டு குழுமம் கட்டுமானம் செய்து வருகிறது. வரும் 2016 ஆம் ஆண்டு இந்த ஓட்டலின் கட்டிடப்பணிகள் முழுமையாக முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கட்டுமான பணிகள் முடிவடைய உள்ள நிலையில் இருப்பதால், 5 நட்சத்திர ஓட்டலை ஏலம் மூலம் விற்பனை செய்ய கால்லியார்டு குழுமம் முடிவு செய்துள்ளது. இந்த ஏலத்தில் பங்குபெற்று 5 நட்சத்திர ஓட்டலை தங்கள் வசமாக்கவேண்டும் என்று யூசுப் அலியின் நிறுவனமான லூலூ குழுமம் விரும்புகிறது.
100 பில்லியன் பவுண்ட் விலை கொடுத்து இந்த ‘கிரேட் ஸ்காட்லாந்து யார்டு’ கட்டிடத்தில் உள்ள ஓட்டலை வாங்க லூலூ குழுமம் திட்டமிட்டுள்ளது. லூலூ குழுமம் மத்திய கிழக்கு நாடுகளில் உணவு பொருள் தயாரிப்பு நிறுவனங்களையும், பல்வேறு நாடுகளில் ஹைப்பர் மார்க்கெட்டுகளையும் மற்றும் ஷாப்பிங் மால்களையும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment