ஸ்காட்லாந்தில் வாழும் சிறுபான்மையினரில் இந்தியர்கள் அதிகம் படித்தவர்களாகவும், உயர் பதவிகளில் இருப்பவர்களாக உள்ளனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகிலேயே தலைசிறந்த போலீசாரை கொண்ட ஸ்காட்லாந்தில் வெளிநாட்டை சேர்ந்த லட்சக்கணக்கானோர் வசிக்கின்றனர். 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, ஸ்காட்லாந்தின் ம க்கள்தொகை சுமார் 53 லட்சம். இதில் 84 சதவீதம் பேர் ஸ்காட்லாந்தை பூர்வீகமாக கொண்டவர்கள். 16 சதவீதம் பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். இங்கு பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கின்றனர். சுமார் 49,000 பேர் வசிக்கின்றனர். சீனாவை சேர்ந்த 34,000 பேரும், இந்தியர்கள் 33,000 பேரும், ஆப்ரிக்க நா டுகளை சேர்ந்த 30,000 பேரும் ஸ்காட்லாந்தில் வசிக்கின்றனர்.
இந்நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த நிறுவனம் ஒன்று, ஸ்காட்லாந்தில் வசிக்கும் சிறுபான்மையினர் குறித்து ஆய்வு நடத்தியது. ஸ்காட்லாந்தில் உள்ள இந்தியர்கள் அதிகம் படித்தவர்கள £கவும், அந்நாட்டில் உயர் பதவிகளை வகிப்பவர்களாகவும் உள்ளனர் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது. பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்பு படித்த இந்தியர்கள் அதிகம் உள்ளதாக தெரிவி க்கப்பட்டது. அங்குள்ள நிறுவனங்களில் இயக்குனர்கள், மேலாளர்கள் போன்ற உயர் பதவிகளில் அதிகளவில் இந்தியர்கள் இடம்பெற்றுள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஸ்காட்லாந்தில் வசிக்கும் ஆப்ரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் பெரும்பாலானோர் வேலையின்றி உள்ளதாகவும், பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் அதிகளவில் டாக்சி டிரைவர்களாக பணிபுரிவதாகவும் கூறப்பட்டுள்ளது. வங்க தேசத்தை சேர்ந்த ஆண்கள் பெரும்பாலும் ஓட்டல்களில் பணிபுரிந்து வருவதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment