அமெரிக்காவின் நியுஜெர்சி நகரில் உள்ள நியூஆர்க் லிபர்டி சர்வதேச விமான நிலையத்திலிருந்து மும்பைக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தின் என்ஜினில் திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக மீண்டும் நியூஆர்க் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது.
அமெரிக்க நேரப்படி மாலை 4:50 மணிக்கு நியூஆர்க் விமான நிலையத்திலிருந்து 250 பேருடன் புறப்பட்ட விமானம், இரண்டு மணி நேரம் வானில் பயணம் செய்த நிலையில், சுமார் 29,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது திடீரென அதன் ஒரு என்ஜினிலிருந்து அதிர்வு சத்தம் அதிகமாக கேட்க ஆரம்பித்தது. இதையடுத்து சாதுர்யமாக செயல்பட்ட விமானி மீண்டும் விமானத்தை நியூஆர்க் விமான நிலையத்திற்கே திருப்பினார்.
தரையிறங்கியவுடன் விமானத்தின் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு குறித்து பொறியாளர்கள் ஆராய்ந்த போது, அதில் உள்ள பிளேட் ஒன்று உடைந்து காணப்பட்டது. இதன் காரணமாகவே சத்தம் அதிகமாக கேட்டது தெரியவந்தது. விமானத்தில் 60 டன் எடையுள்ள எரிபொருள் இருந்ததால் கவனமாக செயல்பட்ட விமானி லேண்டிங் செய்வதற்கு தேவையான அளவுக்கு எரிபொருளை வைத்துக்கொண்டு எஞ்சிய எரிபொருளை டம்ப் செய்து, என்ஜினை ஐடியலாக வைத்து விமானத்தை தரையிறக்கியதால் அதிலிருந்த 250 பேரும் உயிர் பிழைத்தனர்.
பின்னர் பயணிகள் அனைவரும் டெல்லி செல்லும் விமானத்தில் அனுப்பிவைக்கப்பட்டதாக ஏர் இந்தியா செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment